11 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை: தலைவர்கள் வாழ்த்து

11 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை: தலைவர்கள் வாழ்த்து
11 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை: தலைவர்கள் வாழ்த்து
உண்மை உடனுக்குடன் என்ற தாரக மந்திரத்துடன் நடுநிலை பிறழாது செய்திகளை வழங்கி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி மக்கள் சேவையில் இன்று 11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பிறந்த நாள் காணும் புதிய தலைமுறைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், விளையாட்டுத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறியுள்ளனர்.
புதிய தலைமுறை 11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உண்மையை எந்த அச்சமும் சார்பும் இன்றி சொல்லும் புதிய தலைமுறை மக்களின் இதயங்களில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளதாக பாராட்டி உள்ளார்.
வரவேற்பை பெற்றுள்ள புதிய தலைமுறை மக்களின் குரலாக என்றும் ஒலித்திட வாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களுக்கான சேவை வழங்குவதில் 11ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அரசியல், சமூக சூழலை எடுத்து கூறுவதில் புதிய தலைமுறை மிகமுக்கிய பங்கு பெற்றுள்ளதாக தெலங்கனா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும், தமிழ்-க்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய தொலைக்காட்சியாக புதிய தலைமுறை விளங்குகிறது என மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனும் வாழ்த்து கூறியுள்ளனர். மக்களுக்கு பயனுள்ள செய்திகள், நிகழ்ச்சிகளை வழங்கிவரும் புதிய தலைமுறை சேவை தொடர வாழ்த்துவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமியும், ஊடக அறம் தவறாமல் நிகழ்வுகளை பொறுப்புடன் அளித்துவரும் புதிய தலைமுறை தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணிக்க வாழ்த்துவதாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து செய்தியில், செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தலைசிறந்த செய்தி நிறுவனமாக புதிய தலைமுறை விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு சார்பு இல்லாமல் நடுநிலையோடு அனைத்து தரப்பு செய்திகளையும் மக்களுக்கு புதிய தலைமுறை அளித்து வருவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்து கூறியுள்ளார்.
எல்லோருக்கும் சமவாய்ப்பு என்கிற அரசமைப்பு சட்டத்தின் முக்கிய குறிக்கோள்களை நிலை நிறுத்துவதற்கு ஊடகத்துறையின் பங்களிப்பு இன்றியமையாதது என்ற பொறுப்புணர்வோடு புதிய தலைமுறை பயணிக்க விழைகிறேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வாழ்த்து செய்தி அளித்துள்ளார்.
திரைத்துறை, விளையாட்டுத்துறை என பல்துறையை சேர்ந்தவர்களும் புதிய தலைமுறைக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com