புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2025
புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2025புதிய தலைமுறை

புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2025

புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2025 – தங்கத் தமிழர்களைத் தாங்கும் திருவிழா
Published on

செய்தி நிறுவனங்கள் இன்று போட்டிப் பரப்புகளுக்குள் சிக்கி செல்லும் நிலையில், புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி தனது சமூகப் பொறுப்பையும், மனித நேய நெறிமுறைகளையும் மக்களிடையே உறுதியாக எடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் "செய்திக்கு அப்பாற்பட்ட சேவை" என்ற நோக்கத்தில், சிறந்த தமிழ் ஆளுமைகளை கண்டறிந்து விருதுகள் வழங்கும் "தமிழன் விருதுகள்" நிகழ்ச்சி, இப்போது 12-வது ஆண்டிற்குள் நுழைந்துள்ளது.

இந்த ஆண்டின் தீம்– “ஆறின்றி அமையாது ஊரு”.

அதாவது, ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஆறு துறைகளான 

கலை, இலக்கியம், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, சமூகப்பணி – இவற்றில் சாதனை படைத்தோர்களையும், சாதிக்கத் துடிப்போர்களையும் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "தமிழன் விருதுகளை " இதற்கு முன் பெருமைக்குரிய ஆளுமைகள் பெற்றிருக்கின்றனர்.

கமல் ஹாசன், உலக நாயகமும் சமூக சேவகரும்
ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கார் வென்ற இசைஞானி
பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ்.ரவிகுமார், பாக்யராஜ், தமிழ் சினிமாவின் முன்னோடிகள்
மயில்சாமி அண்ணாதுரை, சிவன், இந்திய விண்வெளி ஆய்வின் மைல் கல்லாக விளங்கும் விஞ்ஞானிகள்

வீரமுத்துவேல், சந்திரயான்-3 திட்ட இயக்குநர்

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்

விசுவநாதன் ஆனந்த், உலகச் சதுரங்க சாம்ராஜ்யம் அமைத்த நம் பெருமை!

இந்த வருட விழா ஆகஸ்ட் 9, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. கல்வியாளர்கள், அரச அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், தொழில்முறை நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை மெருகூட்ட உள்ளனர்.

இந்த ஆண்டுக்கான விருது பெறப்போகும் புதிய முகங்கள் யார்? புதிய விருதாளர்கள் உங்களை புருவங்களை உயர்த்தக் இருக்கின்றனர்.

நிச்சயமாக இந்த ஆண்டு நிகழ்ச்சி, தமிழ் மக்களின் ஒவ்வொருவரையும் பெருமைப்பட வைக்கும் ஒரு மறக்கமுடியாத தருணமாக இருக்கப்போகிறது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com