புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, சாலையோரத்தில் இருந்த அடிபம்பு தற்போது அகற்றப்பட்டுள்ளது.
ராசிபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில், சாலையோரத்தில் இருந்த தண்ணீர் அடிபம்பை அகற்றாமல், அதனை பாதி மூடிய நிலையில், புதிய தார் சாலை அமைத்துள்ளனர். இதனால், இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஆகவே அடிபம்பை உடனே அகற்றும்படியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியாகியிருந்த நிலையில், சாலையோரத்தில் இருந்த அடிபம்பு தற்போது அகற்றப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, அடிபம்பில் தண்ணீர் வரவில்லை என்பதால், மாற்று நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனவே அந்த பகுதியில் புதிய அடிபம்பு அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
மேலும் இனிவரும் காலங்களில் நகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில், ஒப்பந்ததாரர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.