மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்ப புதிய தலைமுறை தொலைக்காட்சி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில், அதில் தேர்தல் முடிவுகளுக்கேற்ப கட்சி தலைவர்கள் நடனமாடும் கிராபிக்ஸ் காட்சிகள் மக்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்றது.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடனும், துல்லியமாகவும் நேயர்கள் அறிந்துக்கொள்ள பிரத்யேக ஏற்பாடுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்திருந்தது. பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி, தேர்தல் முடிவுகளுக்குகேற்ப தலைவர்கள் நடனமாடும் கிராபிக்ஸ் காட்சிகளையும் வடிவமைத்தது.
அந்த கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் பொது மக்களின் அமோகவரவேற்பை பெற்றுள்ளது. வேறு எந்த தொலைக்காட்சிகளிலும் இல்லாத வகையில் இருந்த தலைவர்களின் கிராபிக்ஸ் நடன காட்சிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் அதனை பலர் வரவேற்று பல்வேறு பதிவுகளை செய்து வருகின்றனர். மேலும் இந்த படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகின்றது.சிலர் புதிய தலைமுறையின் கிராபிக்ஸ் காட்சிகளை பயன்படுத்தி டிக்டாக் செயலியிலும் பதிவிட்டிருந்தனர்.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அமமுகவின் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் என மொத்தம் 8 தலைவர்களின் கிராபிக்ஸ் படங்கள் உற்சாகத்துடனும் கவலையுடனும் தோன்றும் விதத்தில் 16 விதமான கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன என்பது குறிபிடத்தக்கது.