\
“காரில் சென்றவர் எங்கே என தெரியவில்லை”- புஷ்பவனம் குப்புசாமியின் மகளை காணவில்லை என புகார்..!

“காரில் சென்றவர் எங்கே என தெரியவில்லை”- புஷ்பவனம் குப்புசாமியின் மகளை காணவில்லை என புகார்..!

“காரில் சென்றவர் எங்கே என தெரியவில்லை”- புஷ்பவனம் குப்புசாமியின் மகளை காணவில்லை என புகார்..!
Published on

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல நாட்டுப்புற பாடகரும் திரைப்பட பாடகருமானவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இவர்களது மகள் பல்லவி. டாக்டருக்கு படித்துள்ளார்.

இன்று புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கவுசிக் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் டாக்டர் பல்லவி திடீரென காணாமல் போய்விட்டதாக கூறப்பட்டுள்ளது. “சகோதரிக்கும் அவருக்கும் நேற்றிரவு சண்டை நடந்துள்ளது. அதனால் கோபத்துடன் பல்லவி காரை எடுத்து சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் கண்டுபிடித்து தரவேண்டும்” என்று அபிராமபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் காணாமல் போன பல்லவியை தேடி வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com