புரெவி புயல்: இன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் வாகன போக்குவரத்து நிறுத்தம்

புரெவி புயல்: இன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் வாகன போக்குவரத்து நிறுத்தம்
புரெவி புயல்: இன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் வாகன போக்குவரத்து நிறுத்தம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும், இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தப்படுகிறது.

புரெவி புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகளை நிறுத்த இருப்பதாக சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று மாலை 7 மணி முதல் பேருந்துகள், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் என அனைத்து வாகனங்களும், மறு அறிவிப்பு வரும்வரை, வத்தலக்குண்டு, பழனி மற்றும் அடுக்கம் சாலைகளில் பயணிக்க தடை விதித்து, சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com