இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
Published on

தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 இடங்களில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையங்கள், காய்கறி சந்தைகள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட ஆயிரத்து 652 இடங்களிலும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் நடமாடும் குழுக்கள் மூலமாக கிராமப்புறக் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இந்தாண்டு சுமார் 70 லட்சம் லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com