\
புளியந்தோப்பு இளைஞர் கொலை வழக்கு - மேலும் 7 பேர் கைது

புளியந்தோப்பு இளைஞர் கொலை வழக்கு - மேலும் 7 பேர் கைது

புளியந்தோப்பு இளைஞர் கொலை வழக்கு - மேலும் 7 பேர் கைது
Published on

சென்னை புளியந்தோப்பு கொலை தொடர்பாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்த குமரன் என்பவர் கடந்த 20ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் சதீஸ் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். கஞ்சா வழக்கில் சிக்கி சிறையில் இருந்து ஜாமீனில் வந்த குமரன், முன் விரோதத்தால் கொலை செய்யப்பட்டார். 

ரவுடியாக ஆசைப்பட்ட குமரன், கூட்டாளிகளாலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான அப்பு மற்றும் அவரது கூட்டாளிகள் நரேந்திரன், பிரவின் குமார், சரத்குமார், தேவா, அருண்குமார், சிற்பி ஆகிய ஏழு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆய்வாளர் ரவி தலைமையில் 9 பேர் கொண்ட தனிப்படையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள பரமசிவம், அவினாஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com