விரக்தியில் பைக்கை ஆர்டிஓ-விடம் ஒப்படைத்த இளைஞர்

விரக்தியில் பைக்கை ஆர்டிஓ-விடம் ஒப்படைத்த இளைஞர்

விரக்தியில் பைக்கை ஆர்டிஓ-விடம் ஒப்படைத்த இளைஞர்
Published on

புதுக்கோட்டையில் ஆர்.சி புக் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்ட இளைஞருக்கு புதிய தலைமுறை செய்தி எதிரொலியால் நாளை ஆர்.சி புக் கிடைக்கவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கரூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வக்குமார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கினார். .அந்த வாகனத்திற்கு ஆர்சி புக் வேண்டி அறந்தாங்கி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு ஆர்.சி புக் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த இளைஞர், இன்று ஆர்டிஓ அலுவகத்திற்கு சென்று தனது இருசக்கர வாகனம் மற்றும் சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பான செய்தியை புதிய தலைமுறை வெளியிட்டது. அதன் எதிரொலியாக நாளை செல்வக்குமார் வாகனத்தின் ஆர்.சி புத்தகத்தை தருவதாக ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com