புதுக்கோட்டை: காதல் திருமணத்தால் ஏற்பட்ட பிரச்னை-இளைஞர் தீக்குளிக்க முயற்சி..சாலை மறியலால் பரபரப்பு

புதுக்கோட்டை அருகே இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இளைஞர் தீக்குளிக்க முயற்சி. தீவைத்து எரித்து விட்டதாக பெற்றோர் புகார் வாக்குவாதம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Road blocked
Road blockedpt desk

செய்தியாளர்: முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாணக்கன்காட்டு கிராமத்தைச் சேர்ந்த தவக்குமார் என்ற இளைஞர், அருகே உள்ள கருக்காகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரி என்ற பெண்ணை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், அதன் மேல் கடந்த சமரச பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தவக்குமார். சுந்தரியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளார்.

Road blocked
Road blockedpt desk
Road blocked
குட்டி யானையை குடும்பத்துடன் சேர்க்கும் முயற்சி தோல்வி; முதுமலை யானைகள் முகாமில் சேர்ப்பு!

இதனிடையே தவக்குமாருக்கும் சுந்தரியின் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக சுந்தரியின் வீட்டு முன்பு தவக்குமார் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி, தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுந்தரியின் குடும்பத்தினர்தான் தவக்குமாரை தீ வைத்து எரித்து விட்டதாகவும், அவர் இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், அந்த குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தவக்குமாரின் உறவினர்கள் வணக்கன்காட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தின் போது போலீசாருக்கும் தவக்குமாரின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com