\
டெங்குவைப் பரப்பும் கொசு
டெங்குவைப் பரப்பும் கொசுபுதியதலைமுறை

புதுக்கோட்டை | அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. மூவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி.. அவதியில் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் நோய் பாதிக்கப்பட்ட மக்கள் குவிந்து வருகின்றனர்.
Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் நோய் பாதிக்கப்பட்ட மக்கள் குவிந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் நோய் பாதிக்கப்பட்ட மக்கள் குவிந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 139 பேர் காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 44 பேருக்கு டெங்கு உறுதியான நிலையில், இந்த மாதம் தற்போது வரை 26 பேர் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் பலரும் குடும்பம் குடும்பமாய் காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். 10 நாட்கள் வரை பாதிப்பு நீளுவதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாள்தோறும் 44 மருத்துவ முகாம்கள் என்ற அடிப்படையில் ஆயிரத்து 237 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில், 34ஆயிரத்து 142 பேருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சைவழங்கப்பட்டுள்ளது. இதே போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,மாவட்டம் முழுவதும் 100 நாள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com