\
புதுக்கோட்டை
புதுக்கோட்டை முகநூல்

புதுக்கோடை - சாதி பெயரை கேட்டு பாடகர் மீது தாக்குதல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாடகர் ஒருவரை சாதியின் பெயர் கேட்டு தாக்கிய மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Published on

மழையூர் அருகே ஆயிப்பட்டி அண்ணா நகரில் வசிக்கும் பாடகர் பிரகாஷ், தன் உறவினருடன் தீபாவளியன்று பட்டாசுகள் வாங்கிக் கொண்டு ஊர் திரும்பியுள்ளனர்.

இருவரும் மோளுடையான்பட்டி எனும் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது நான்கு இளைஞர்கள், பாடகரை அவரின் சாதி பெயரை கூறியும் திட்டியும் அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் கற்கள், பீர்பாட்டில்கள் கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தவே பாடகர் பிரகாஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுக்கோட்டை
ஆந்திரா: சலூன்ல நடந்த சாதி கொடுமை.. கொதித்த அதிகாரிகள்.. களத்தில் இறங்கி அதிரடி ஆக்‌ஷன்!

பிரகாஷ் அளித்த புகாரில் பேரில் தொண்டமான் ஊரணி கிராமத்தைச் சேர்ந்த சாரதி, பிரசாத், தேவா மற்றும் மழையூரை சேர்ந்த நவீன் ஆகிய நான்கு இளைஞர்கள் மீது மழையூர் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை மூலம் தேடிவந்தனர். வழக்கில் நவீன் என்ற இளைஞரை கைது செய்து, மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com