\
புதுக்கோட்டை: அரசு மருத்துவமனை ஓ.பி. சீட்டில் இரட்டை இலை சின்னம் இருந்ததால் சர்ச்சை!

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனை ஓ.பி. சீட்டில் இரட்டை இலை சின்னம் இருந்ததால் சர்ச்சை!

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனை ஓ.பி. சீட்டில் இரட்டை இலை சின்னம் இருந்ததால் சர்ச்சை!
Published on

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற நோயாளிகளுக்கு இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட வெளி நோயாளி சீட்டு வழங்கப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் தகவலறிந்து அங்கு திரண்ட திமுகவினர் மருத்துவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட ஓபி சீட்டு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து அருகே இருந்த அச்சகத்தில் இருந்து, ஒருபுறம் பயன்படுத்தக்கூடிய பேப்பர்களை வாங்கி வந்து பயன்படுத்தியதாகவும், அதில் மறுபுறம் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததை சுகாதாரப் பணியாளர்கள் சரியாக கவனிக்கவில்லை எனவும் சுகாதார துணை இயக்குநர் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com