\
மது போதையில் அண்ணா சிலை கூண்டின் மேல் ஏறி ரகளை
மது போதையில் அண்ணா சிலை கூண்டின் மேல் ஏறி ரகளைpt desk

புதுக்கோட்டை: மது போதையில் அண்ணா சிலை கூண்டின் மேல் ஏறி ரகளையில் ஈடுபட்ட நபர்! வீடியோ

புதுக்கோட்டை அண்ணா சிலை கூண்டின் மேல் படுத்து அலப்பறையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை அருகே தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், மது போதையில் புதுக்கோட்டை நகரில் உள்ள அண்ணா சிலை கூண்டின் மேல் ஏறி அலப்பறையில் ஈடுபட்டவாறு, கால் மேல் கால் போட்டு படுத்துக் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மது போதையில் இருந்த நாகராஜனை கீழே இறங்கி வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

 அண்ணா சிலை
அண்ணா சிலை

ஆனால், நாகராஜன், கூண்டின் மேல் படுத்து கொண்டு கீழே இறங்காமல் அடம்பிடித்தவாறு இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் நாகராஜனை வலுக்கட்டயமாக கீழே இறக்கினார். அப்போது நாகராஜன் தடுமாறி கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மீட்ட போலீசார், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மது போதையில் அண்ணா சிலை கூண்டின் மேல் ஏறி ரகளை
வடலூர் | தனியார் பள்ளியில் பயிற்சியின் போது மாணவரின் தலையில் பாய்ந்த ஈட்டி! இறுதியில் நேர்ந்த சோகம்!

முன்னதாக பேசிய போதை ஆசாமி நாகராஜன், தனது தேத்தாம்பட்டி கிராமத்திற்கு இதுவரை எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை என்றும் இதை கண்டித்து கூண்டின் மேல் ஏறி போராட்டம் செய்ததாக தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com