கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய ஆடுகள்.. கொட்டும் மழையிலும் நடந்த மீட்புப்பணி!

கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய ஆடுகள்.. கொட்டும் மழையிலும் நடந்த மீட்புப்பணி!
கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய ஆடுகள்.. கொட்டும் மழையிலும் நடந்த மீட்புப்பணி!

முக்கண்ணாமலை பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த 3 ஆடுகளை கொட்டும் மழையிலும் தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலை பட்டியைச் சேர்ந்தவர் பாக்கினிசா. வீட்டில் ஆடுகளை வளர்த்து வரும் இவர், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கே மேய்ந்து கொண்டிருந்த மூன்று ஆடுகளும் அருகே உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

அதைப் பார்த்த பாக்கினிசா அக்கம் பக்கத்தினரை அழைத்து கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை மீட்க முயற்சி செய்தார். இருப்பினும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 ஆடுகளையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் 3 ஆடுகளும் ஆட்டின் உரிமையாளர் பாக்கினிசாவிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர். தீயணைப்புத் துறையினரின் இந்த செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com