புதுக்கோட்டை | தொழுகையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த நபர் - சிசிடிவியில் பதிவான சோக நிகழ்வு!
செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை அடப்பன்வயலில் உள்ள பள்ளிவாசலில் நேற்று மதியம் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகைக்கு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹீம் ஷா சென்றுள்ளார். அப்போது அனைவரின் மத்தியிலும் அமர்ந்து நிலையில் தொழுகையில் ஈடுபட்டுள்ளார். அப்போது சையது இப்ராஹீம் ஷா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள்
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சையது இப்ராஹீம் ஷா உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சையது இப்ராஹீம் ஷா உடல் அவர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று இஸ்லாமிய முறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. புதுக்கோட்டையில் ரமலான் நோன்பு காலத்தில் தொழுகையின் போது மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.