"ஐயா நீங்க எங்க கடவுள்" - மக்களை நெகிழச் செய்த அரசு அதிகாரி... அப்படி என்ன செய்தார் தெரியுமா?

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் முருகேசன் என்பவர் நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் குழந்தையை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்க வைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டாட்சியர் முருகேசன்
கோட்டாட்சியர் முருகேசன்file image

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியராக பணியாற்றி வருபவர் முருகேசன். இவர் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி, பலருக்கும் உதவியுள்ளார்.

கொடைக்கானலைப் போலவே புதுக்கோட்டை மக்களின் பிரச்னைகளுக்கும் விரைந்து தீர்வு கண்டு வருகிறார். இதில் இவர் சமீபத்தில் புதுக்கோட்டை பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதி சான்றிதழ் வழங்கியுள்ளார். இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிகூட கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நடைபெற்றது.

அப்போது நிகழ்ச்சிக்கு வந்த சங்கீதா என்ற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கை குழந்தையுடன் நின்றதை இவர் கவனித்துள்ளார். அந்த பெண்ணிடம் குழந்தை குறித்து விசாரித்துள்ளார். குழந்தையின் வயதிற்கும் உடல் வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பதாக அப்பெண் கூறியுள்ளார். (வளர்ச்சி குறைபாட்டோடு குழந்தை இருந்துள்ளது)

கோட்டாட்சியர் முருகேசன்
"ராக்கெட் விழுந்து கொண்டே இருந்தது" - இஸ்ரேலில் இருந்து மதுரை திரும்பியவர் பேட்டி

இதனைக் கேட்ட கோட்டாட்சியர் முருகேசன், மறுநாள் அந்தப் பெண்ணை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவக் கல்லூரியின் [பொறுப்பு] முதல்வர் ராஜ்மோகனிடம் குழந்தை வளர்ச்சி குறித்தும், குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படியும் கூறியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவக் குழுவினர் உடனடியாக அந்த குழந்தைக்கு அனைத்து விதமான சோதனைகளையும் மேற்கொண்டனர். மேலும் 15 நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் தங்க வைத்து குழந்தைக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்கி வந்துள்ளனர். இதனால் குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைப்பார்த்து குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குழந்தையின் தற்போதைய நிலை குறித்தும் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் குழந்தைகள் நல மருத்துவர் முத்து பாலசுப்பிரமணிடம் கேட்டபோது, "எங்கள் மருத்துவ குழுவினர் அனைத்து விதமான பரிசோதனைகளையும் மேற்கொண்டு வந்தனர். குழந்தைக்குத் தேவையான சிகிச்சை அளித்துள்ளோம். இன்னும் ஒரு சில மாதங்கள் பொறுத்திருந்து குழந்தை எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதன் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அடுத்த கட்ட சோதனைக்காக சென்னையில் உள்ள எழும்பூர் குழந்தைகள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப பரிந்துரைக்கப்படும்.

கோட்டாட்சியர் முருகேசன்
கணநொடியில் நகையை மாற்றிய பெண்.. நூதன முறையில் மோசடி.. போலீஸ் வலைவீச்சு

அங்கே கூடுதல் சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை மேற்கொள்ளும். குழந்தை முன்பு இருந்ததை விட தற்போது சற்று வளர்ச்சி பெற்று வருவது நம்பிக்கை கொடுத்துள்ளது. குறிப்பாக குழந்தை தற்போது நடக்கத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தையின் பெற்றோர் ஓரிடத்தில் தங்காமல் தொழில் ரீதியாக அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்றதாலும், குழந்தையைச் சிறுவயதிலிருந்து முறையாகக் கண்காணிக்காமல் இருந்ததாலும் இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் உள்ளது. குழந்தைக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகிறோம்” என்றார்.

இதுதொடர்பாக தாய் சங்கீதாவிடம் கேட்டபோது, "சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக கறம்பக்குடியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா கூட இல்லாத சூழலில் வீட்டு மனை பட்டா மற்றும் ஜாதி சான்றிதழ்கள் வழங்கியுள்ளார் கோட்டாட்சியர். நாங்கள் தொழில் தொடங்கவும் உதவி செய்துள்ளார். எங்களைக் கண்டுகொள்ளாமல் விலகிச் செல்லும் அரசு அதிகாரிகளுக்கு மத்தியில் எங்களிடம் நெருங்கி வந்து பிரச்னையைக் கேட்டுத் தீர்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எங்கள் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com