பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுப்பு? - புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. நேரில் விசாரணை

பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுப்பு? - புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. நேரில் விசாரணை
பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்ய மறுப்பு? - புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. நேரில் விசாரணை

புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டியில் பட்டியலின மக்களுக்கு முடிதிருத்தம் செய்ய மறுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி, கோட்டாட்சியர் இன்று நேரில் விசாரணை நடத்த உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டி கிராமத்தில் உள்ள சலூன் கடைகளில் பட்டியலின மக்களுக்கு முடி திருத்தம் செய்வதில்லை என்றும் இதுபற்றி விசாரிக்க வேண்டுமென்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப் பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள், புதுக்கோட்டை ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த விவகாரம் குறித்து புதுப்பட்டி கிராமத்தில் 'புதிய தலைமுறை' கள ஆய்வு செய்து, செய்தித் தொகுப்பை ஒளிபரப்பியது.

இந்நிலையில், இன்று புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் அபிநயா விசாரணை நடத்துகிறார். வழக்கு தொடர்ந்த செல்வம், புதுப்பட்டியில் உள்ள 3 சலூன் கடைகளின் உரிமையாளர்கள், கிராம மக்களின் பிரதிநிதிகள், பட்டியலின மக்களின் பிரதிநிதிகள் என 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த 8 பேரும் நேரில் ஆஜராகுமாறு 'புதிய தலைமுறை' செய்தியை சுட்டிக்காட்டி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மத ரீதியாக பிளவுபட்டதா - நீதிமன்றம் கேள்வி

 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com