அமைச்சருக்கு உரித்த வாழைப்பழங்களை அனுப்ப முயன்ற பாஜக முன்னாள் நிர்வாகி; எச்சரித்து அனுப்பிய போலீசார்

புதுக்கோட்டையில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, பா.ஜ.க முன்னாள் நிர்வாகியால் அனுப்பப்பட இருந்த 108 உரித்த வாழைப்பழங்களை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சனாதனம் ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், சனாதனத்தை வாழைப்பழத்துடன் ஒப்பிட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்து, புதுக்கோட்டை பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் என்பவர், அமைச்சர் சேகர்பாபுவுக்கு தோல் உரிக்கப்பட்ட 108 வாழைப்பழங்களை மட்டும் கொரியர் மூலம் அனுப்ப முயற்சித்தார்.

புதுக்கோட்டை நகர பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கொரியர் அலுவலகத்திற்கு, அவர் எடுத்துவந்திருந்த வாழைப்பழங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுபோல் இனி செய்யக்கூடாது என எச்சரித்து அந்த நபரை அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com