தவெக தலைவர் விஜய், கலைவாணன் ஐ.பி.எஸ்
தவெக தலைவர் விஜய், கலைவாணன் ஐ.பி.எஸ்pt web

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டம் | தமிழக மக்களுக்கு அனுமதி இல்லை.. QR Code நுழைவுச் சீட்டு அவசியம்!

புதுச்சேரியில் நாளை தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரி மக்கள் மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
Published on

புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் நாளை (செவ்வாய்க் கிழமை) தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் தமிழக வெற்றிக் கழக்தின் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள உப்பளம் துறைமுக மைதானத்தை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், இந்த மைதானத்தை சீர் செய்யும் பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு மேடை எதுவும் அமைக்கப்படாத நிலையில், தவெக தலைவர் விஜய் பரப்புரை வாகனத்தில் இருந்தே பேசவிருக்கிறார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt web

இதனிடையே, தவெக-வின் பொதுக்கூட்டம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அறிக்கையை சட்டம் ஒழுங்கு காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் கலைவாணன் நேற்று வெளியிட்டார். அதில், "பொதுக் கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தமிழகம் மற்றும் அண்டை மாநிலத்தவருக்கு அனுமதி அளிக்கப்படாது. தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் அனுமதி பாஸ் முற்றிலும் புதுச்சேரி சார்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும், தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தரப்படும் க்யூ ஆர் கோடு கொண்ட நுழைவு சீட்டு வைத்திருப்போர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் நுழைவு சீட்டு இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் பொதுமக்கள் அரங்குகளுக்கு வர வேண்டாம்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய், கலைவாணன் ஐ.பி.எஸ்
ஈரோடு | தவெக பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன?

இவ்வாறு, புதுச்சேரி காவல்துறையினர் தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளதால், புதுச்சேரி மாநில எல்லை பகுதியான கோரிமேடு, கனகசெட்டிக்குளம், கன்னியக்கோவில், மதகடிப்பட்டு, திருக்கனுார் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளிலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம சாலைகள் வழியாக புதுச்சேரிக்குள் நுழையும் வழிகள் உட்பட 17 இடங்களில் போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

புதுச்சேரி துறைமுக மைதானம்
புதுச்சேரி துறைமுக மைதானம்x

மேலும், பேருந்து மற்றும் ரயில் மூலம் புதுச்சேரிக்கு நுழைவதை தடுக்கும் வகையில் ரயில் நிலையங்கள் மட்டும் பேருந்து நிலையம் அருகேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து, தமிழகத்திலிருந்து புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் முக்கிய கட்சி நிர்வாகிகளுக்கு, தமிழக வெற்றி கழகம் சார்பில் அனுமதி கடிதம், மற்றும் கியூ ஆர் கோடுடன் அடங்கிய பாஸ் கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய், கலைவாணன் ஐ.பி.எஸ்
தர்மபுரி | போராட்டத்தில் காவலரின் கையை கடித்த தவெக இளைஞர் கைது.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com