புத்தாண்டை கொண்டாட புதுச்சேரியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
புத்தாண்டை கொண்டாட வெளியூர் மக்கள் குவிந்துள்ளதால் புதுச்சேரி களைகட்டத் தொடங்கியுள்ளது.
கடற்கரையோரம் இருக்கும் விடுதிகள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க புதுச்சேரி சுற்றுலாத்துறையும், தனியார் நிறுவனங்களும் இணைந்து நடனம், இசை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை என பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன. பல்வேறு தனியார் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில், சிறப்பு சலுகைகளை அறிவித்து புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றன.
அதே வேளையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆலோசனை நடத்தினார். எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வகையில் பாதுகாப்பளிக்க வேண்டும் என காவல்துறையினருக்கு அவர் அறிவுறுத்தினார்.