நீட் விவகாரம்: கிரண் பேடியிடம் சரமாரியாகக் கேள்விகேட்ட பொதுமக்கள்

நீட் விவகாரம்: கிரண் பேடியிடம் சரமாரியாகக் கேள்விகேட்ட பொதுமக்கள்

நீட் விவகாரம்: கிரண் பேடியிடம் சரமாரியாகக் கேள்விகேட்ட பொதுமக்கள்
Published on

புதுச்சேரியில் நடைபெற்ற மருத்து‌வக் க‌லந்தாய்வின் போது அம்மாநில ஆளுநர் கிரண் பேடி ஆய்வு நடத்தினார்.

புதுச்சேரி சென்டாக் மையத்தில் இன்று இரண்டாவது நாளாக நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்றது. அப்போது, அங்கு திடீர் ஆய்வில் ஈடுபட்ட கிரண் பேடியிடம், மாநில அரசு பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்காதது ஏன்?, தமிழகத்தில் கலந்தாய்வு நடைபெறாத நிலையில் இங்கு மட்டும் அவசரமாக நடத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காத நிலையில் அவர் சிறிது நேரத்தில் காரில் திரும்பிச் சென்றார்.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் மருத்துவக் கலந்தாய்வை கிரண் பேடி திடீரென ஆய்வு செய்தார். மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை தராமல் அவசரமாக கலந்தாய்வு நடத்துவது ஏன் எனக்கேட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கிரண் பேடியை சூழ்ந்துகொண்டு முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டிற்காக பெறப்பட்ட 293 இடங்களுக்கு நீட் தேர்வின் அடிப்படையில் நேற்று சென்டாக் மையத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் நேற்று 222 இடங்கள் நிரப்பப்பட்டது. மீதமுள்ள 64 இடங்களுக்கு இன்று இரண்டாவது நாளாக கலந்தாய்வு நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் மருத்துவ முதுநிலை மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக அப்போது ஆய்வு செய்த கிரண் பேடி அரசின் மீது பல்வேறு ஊழல் புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி சிபிஐ அதிகாரிகளும் சோதனையிட்டு சென்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு பின்னர் மத்திய மருத்துவ கவுன்சிலின் அறிவுரைப்படி கலந்தாய்வு நடந்ததை உறுதி செய்தது. இந்த விவகாரம் தான் ஆளுநர் கிரண் பேடிக்கும் அமைச்சரவைக்கும் மோதலை உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் ஆகும்.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு கிரண் பேடி திடீரென வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் சென்டாக் மைய அதிகாரிகளிடம் கலந்தாய்வு குறித்து கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து வெளியே வந்த அவரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சூழ்ந்துகொண்டு இந்தக் கலந்தாய்வை அவ்வளவு சீக்கிரமாக செய்ய வேண்டியதன் அவசியம் என்ன மாநில பாடத்திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வந்துள்ளது. மேலும் அங்கு கலந்தாய்வு நடத்தாத நிலையில் தமிழக அரசின் கல்வி பாடத்திட்டதை பின்பற்றும் புதுச்சேரி அரசு ஏன் இப்படி நடக்கின்றது என சரமாரி கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த கிரண் பேடி அது வேறு மாநிலம் இந்த ஆண்டு எதுவும் செய்ய முடியவில்லை எனக்கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கிரண் பேடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மருத்துவக் கலந்தாய்வு மத்திய மருத்துவ கவுன்சிலிங்கின் வழிகாட்டுதல் படியும், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி நீட் தேர்வின் அடிப்படையில் முறையாக நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். கிரண் பேடியின் திடீர் வருகையால் சென்டாக் மைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com