'தமிழகத்துக்கு நான் வருவதை யாரும் தடுக்க முடியாது' - ஆளுநர் தமிழிசை

'தமிழகத்துக்கு நான் வருவதை யாரும் தடுக்க முடியாது' - ஆளுநர் தமிழிசை
'தமிழகத்துக்கு நான் வருவதை யாரும் தடுக்க முடியாது' - ஆளுநர் தமிழிசை

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டி பின்வருமாறு:- 

''புதுச்சேரியில் 13 ஆண்டுகளுக்குப் பின் பட்ஜெட் தாக்கல் நடைபெறுவது பெருமையான நிகழ்ச்சி. புதுச்சேரி பல வகைகளில் முன்னேறி வருகிறது என்பதற்கு இந்த பட்ஜெட் முன்னுதாரணம். இரவல் ஆளுநர் என்று விமர்சிக்கப்படும் நிலையில் தான் முழுநேரம் பட்ஜெட் தாக்கல் செய்கிறோம். மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறோம். கொரோனா காலகட்டத்தில் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம். இரவல் ஆளுநராக இருந்தாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும். இரக்கமுள்ள ஆளுநராகவே நான் பணியாற்றி வருகிறேன்.

பாரதியாரையும், பாரதிதாசனையும் மேற்கோள்காட்டி ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தியதை திமுகவினரே பாராட்டியுள்ளனர். கட்சி பாகுபாடு பார்க்காமல், புதுச்சேரியை முன்னேற்றியாக வேண்டும் என்ற முழுமையான எண்ணம் உள்ள ஆளுனராக செயலாற்றி வருகிறேன். தமிழகத்தில் ஆளுநர் தொடர்பான நிகழ்வுகளை நான் கூறவில்லை. என்னை பொருத்தவரை ஒரு சகோதரியாக மகளிர் தின விழாவில் பங்கேற்க தமிழகத்துக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. யார் என்ன சொன்னாலும் தமிழகத்திற்குள்வந்து கொண்டு தான் இருப்பேன்'' என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com