\
புதுச்சேரி: கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி

புதுச்சேரி: கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி

புதுச்சேரி: கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி
Published on

புதுச்சேரியில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே திருவண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47). கூலி தொழிலாளியான இவர், திருபுவனை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவர் கழிவுநீர் தொட்டியை திறந்தவுடன் விஷ வாயு தாக்கியதில், மயக்கமடைத்து கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருபுவனை காவல்நிலைய போலிசார் ரமேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com