மனித உரிமை செயற்பாட்டாளர் மீது தாக்குதல் : சிசிடிவி காட்சியில் அம்பலம்
புதுச்சேரியில் மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் பொதுச்செயலாளர், மளிகைக் கடையில் சரமாரியாக தாக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது.
புதுச்சேரியை அடுத்துள்ள குயவர்பாளையம் பகுதியை சார்ந்த முருகானந்தம் லெனின் வீதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
அத்துடன் மட்டுமல்லாமல் புதுச்சேரியில் மனித உரிமைகள் ஆணைய பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு
வருகிறார். இந்நிலையில் நேற்று மளிகை கடைக்கு வந்த பாலாஜி என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து முருகானந்தத்தை அடித்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
மளிகை கடை உரிமையாளராக முருகானந்தத்தை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பினை ஏற்பட்டுள்ளது. தனது கடையில் தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முருகானந்தம் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தாக்குல் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

