``ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால், எந்த பயனுமில்லை”- துணை நிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

``ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால், எந்த பயனுமில்லை”- துணை நிலை ஆளுநர் தமிழிசை பேட்டி
``ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால், எந்த பயனுமில்லை”- துணை நிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை என்றும், ஆளுநரும் தனது கருத்தை சொல்ல உரிமை உள்ளது என்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதுச்சேரியில் கடல் அரிப்பால் கடலையொட்டி வசிக்கும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே 60 கோடி ரூபாய் வரை கடல் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அப்படி செயல்படுத்தப்பட்டால் கடல் அரிப்பு தடுக்கப்பட்டு கடலோரம் வசிக்கும் மீனவ கிராமங்களில் பாதிப்பு தடுக்கப்படும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்துவது குறித்து திமுக, காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருக்ளு கடிதம் அனுப்பவுள்ளது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஆளுநருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆளுநர் ஒரு கருத்தை சொன்னால் அதற்கு எதிர் கருத்து சொல்லலாம். அதை விட்டுவிட்டு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என கூறுவது தேவையில்லாத ஒன்று.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்புவதால் எந்த வித பயனும் இல்லை. நாட்டில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு” என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com