கிரண்பேடி நீக்கம்...புதுச்சேரி மக்களுக்கு விமோசனம் கிடைத்ததாக முதல்வர் நாராயணசாமி வரவேற்பு

கிரண்பேடி நீக்கம்...புதுச்சேரி மக்களுக்கு விமோசனம் கிடைத்ததாக முதல்வர் நாராயணசாமி வரவேற்பு
கிரண்பேடி நீக்கம்...புதுச்சேரி மக்களுக்கு விமோசனம் கிடைத்ததாக முதல்வர் நாராயணசாமி வரவேற்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டதற்கு முதல்வர் நாராயணசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் நீடித்து வந்தநிலையில், இன்று கிரண்பேடியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் குடியரசுத் தலைவர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ‘’ நானும், புதுச்சேரியில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி தலைவர்களும் இணைந்து கிரண்பேடிக்கு எதிராக பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். புதுச்சேரியில் அராஜகமாவும், விதிகளை மீறியும், மக்களின் உணர்வுகளை மதிக்காமலும் அவர் செயல்பட்டுவந்தார். அதுமட்டுமல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களையும், அமைச்சரவையையும் அவர் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதால் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன், கிரண்பேடியை திரும்பப்பெற வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை வைத்தோம்.

6 நாட்கள் கிரண்பேடி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினோம். கொரோனா தொற்று குறைந்தபிறகு மீண்டும் 3 நாட்கள் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வளவும் செய்தபிறகுதான் மத்திய அரசு விழித்துக்கொண்டு கிரண்பேடியை திரும்பப்பெற்றுள்ளது. புதுச்சேரி மக்களை வஞ்சித்தது மட்டுமல்லாமல் புதுச்சேரியின் வளர்ச்சிக்கும் பாதகம் விளைவித்திருக்கிறார் என்று பலமுறை கூறியபிறகு அவரை திரும்பப்பெற்றுள்ளதால், இனி புதுச்சேரி மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

தற்போது வந்துள்ள ஆளுநர் அரசின் விதிகள் மற்றும் அரசியல் அமைப்பு சட்டங்களுக்கு உட்பட்டு தன்னுடைய கடமையை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்று கூறினார்.

சமீபத்தில் புதுச்சேரி முதல்வர் மற்றும் எம்.பிக்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த சந்திப்பில் கிரண்பேடியை திரும்பப்பெறுமாறு கோரிக்கை வைத்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Shri V. Narayanasamy, Chief Minister of Puducherry, along with Ministers and MP from Puducherry, called on President Kovind at Rashtrapati Bhavan. <a href="https://t.co/ihc4EzzHUe">pic.twitter.com/ihc4EzzHUe</a></p>&mdash; President of India (@rashtrapatibhvn) <a href="https://twitter.com/rashtrapatibhvn/status/1359407778519867392?ref_src=twsrc%5Etfw">February 10, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com