தமிழகத்திற்கான புதுச்சேரி பேருந்துகளில் கட்டணம் உயர்வு

தமிழகத்திற்கான புதுச்சேரி பேருந்துகளில் கட்டணம் உயர்வு

தமிழகத்திற்கான புதுச்சேரி பேருந்துகளில் கட்டணம் உயர்வு
Published on

புதுச்சேரியிலிருந்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் என அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு கடந்த 20ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசும் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுச்சேரியிலிருந்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் என அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் புதுச்சேரி அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று ‌முதல் கட்‌டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 

புதுச்சேரியிலிருந்து சென்னைக்குக் கிழக்குக்கடற்கரைச் சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 100 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக உயர்த்த‌ப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு 80 ரூபாயாக இருந்த கட்டணம் 120 ரூபாயாகவும், பெங்களூ‌ருவுக்கு 290 ரூபாயாகவும், திருப்பதிக்கு 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com