காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டி ?

காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டி ?

காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டி ?
Published on

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் போட்டியிடுகிறது. மேலும் இக்கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையில் ஈடுபட தொடங்கிவிட்டன.ஆனால் தேசிய கட்சியான காங்கிரஸ் தனது வேட்பாளர்களை இதுவரை அறிவிக்காமல் உள்ளது.

இந்த சுழலில் பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகின்ற நிலையில் வேட்பாளரை இறுதி செய்ய டெல்லி சென்ற புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் புதுச்சேரி திருப்பியுள்ளனர். 

இந்நிலையில் இன்று சபாநாயகர் வைத்திலிங்கமும், நாராயணசாமியும் சட்டப்பேரவை அலுவலகம் வந்தனர்.அப்போது புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவிக்கப்படலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com