ஆண், பெண் கைதி சந்திப்பு விவகாரம்: 4 பேர் சஸ்பெண்ட்
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் ஆண் கைதியும், பெண் கைதியும் ரகசியமாக சந்தித்து பேசிய சம்பவத்தின் எதிரொலியாக சிறைத்துறை துணை கண்காணிப்பாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஏற்கனவே சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைப்பதாக புகார் எழுந்தநிலையில், சிறைத் துறை ஐஜி பங்கஜ்குமார் ஷா, காலாப்பட்டு மத்திய சிறையில் அதிரடிசோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரு தனி அறையில் ஆண் கைதி மணிகண்டனுடன் பெண் கைதி எழிலரசி பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையை பொறுத்தவரையில் ஆண் கைதிகள், பெண் கைதிகளை சந்தித்து பேசுவதற்கு அனுமதி இல்லை. அதனை மீறி, இந்த சந்திப்புக்கு உடந்தையாக இருந்த சிறைத்துறை துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், முதன்மை வார்டன் வீரவாசு, வார்டன் பத்மநாபன், பெண் வார்டன் கலாவதி உள்ளிட்ட நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை ஐஜி பங்கஜ்குமார் ஷா உத்தரவிட்டுள்ளார்.