திறப்பு விழாவிற்காக காத்திருந்த புதிய மேம்பாலத்தை திறந்த பொதுமக்கள்-போலீசார் அதிரடி முடிவு

திறப்பு விழாவிற்காக காத்திருந்த புதிய மேம்பாலத்தை திறந்த பொதுமக்கள்-போலீசார் அதிரடி முடிவு
திறப்பு விழாவிற்காக காத்திருந்த புதிய மேம்பாலத்தை திறந்த பொதுமக்கள்-போலீசார் அதிரடி முடிவு

காஞ்சிபுரத்தில் திறப்பு விழாவிற்காக காத்திருந்த புதிய மேம்பாலத்தை பொதுமக்களே திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்த நிலையில், போலீசார் மீண்டும் மேம்பாலத்தை மூடினர்.

காஞ்சிபுரம் நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலாக இருந்து வந்தது இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மேம்பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் நிலையில், இன்று காலை காஞ்சிபுரம் புதிய ரயில் நிலைய ரயில்வே கேட் மூடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதனால், திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரயிவே மேம்பாலத்தை பொதுமக்களே திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே மேம்பாலத்தில் பணிகள் நடைபெறுவதாகக் கூறி மேம்பாலத்தை போலீசார் மீண்டும் மூடினர்.

இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை - பெங்களூர் சாலை செல்ல முடியாமலும், சென்னையில் இருந்து வரும் வாகன ஒட்டிகள் காஞ்சிபுரம் வர முடியாமலும் தவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com