தமிழ்நாடு
ஏழு அடி நீள மலைப்பாம்புடன் செல்பி எடுத்த பொதுமக்கள்
ஏழு அடி நீள மலைப்பாம்புடன் செல்பி எடுத்த பொதுமக்கள்
கிருஷ்ணகிரியில் கோழிக் கடைக்குள் புகுந்த மலைப்பாம்புடன் பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
போச்சம்பள்ளியை அடுத்த கோணனூர் ஏரி அருகே உள்ள கோழிக் கடைக்குள் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது. அதிகாலையில் மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தைரியமாக பாம்பை கையால் பிடித்ததுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அனைவரும் திகைத்தனர்.
பின்னர், வனத்துறையினர் வருவதற்குள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாம்பின் அருகில் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். அதன் பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பாம்பை பத்திரமாக பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.

