மக்களவைத் தேர்தல் 2024: "அடிப்படை வசதி எதுவும் செய்து தரல"-வேட்பாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நாமக்கல் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
KMDK Candidate
KMDK Candidatept desk

செய்தியாளர்: எம்.துரைசாமி

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன் நேற்றிரவு நாமக்கல் நகராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கிருஷ்ணாபுரம் அருந்ததியர் காலனி பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றார்.

KMDK Candidate
KMDK Candidatept desk
KMDK Candidate
“தம்பி, ஆணவத்தோடு பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” - அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி

அப்போது அங்கிருந்த பொதுமக்களும் வேட்பாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்தவர்கள் தற்போது தான் மீண்டும் இப்பகுதிக்கு வருவதாகவும் தங்களுக்கு சாலை வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் தாங்கள் கடும் அவதிப்படுவதாகவும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் எப்படி வாக்கு சேகரிக்க வந்தீர்கள் எனக் கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு வேட்பாளர், தான் வெற்றி பெற்று வந்தால் நிச்சயம் இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com