மயிலாப்பூர் | மின்விநியோகம் வழங்க கோரி தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டம்

சென்னை மயிலாப்பூரில் மின் விநியோகம் வழங்கப்படாததை கண்டித்து தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மயிலாப்பூர்
மயிலாப்பூர்முகநூல்

மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரே வெள்ளத்தில் மிதந்தது. இதனால் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மழைநீர் வடிந்த இடங்களில் படிப்படியாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

மயிலாப்பூர்
கள்ளக்குறிச்சி: தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நலம்பெற வேண்டி மண்சோறு சாப்பிட்ட தொண்டர்கள்!

இந்நிலையில் மயிலாப்பூர் வீரப்பெருமாள் கோயில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த 4 நாட்களாக உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மழைநீரை உடனே அகற்றி, மின் விநியோகம் வழங்க கோரி லஸ் கார்னர் பகுதியில் பொதுமக்கள் நேற்று இரவு தீப்பந்தம் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com