எண்ணெய் கிணற்றை மூ‌ட ஓ.என்.ஜி.சி-க்கு பொதுமக்கள் கெடு

எண்ணெய் கிணற்றை மூ‌ட ஓ.என்.ஜி.சி-க்கு பொதுமக்கள் கெடு
எண்ணெய் கிணற்றை மூ‌ட ஓ.என்.ஜி.சி-க்கு பொதுமக்கள் கெடு

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகேயுள்ள நல்லாண்டார் கொல்லையில் ஓ.என்.ஜி.சி கழிவுத்தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, இன்று மாலைக்குள் எண்ணெய் கிணற்றை மூ‌ட கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. அடுத்து நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக இரண்டாம் கட்டமாக 150 நாள்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நெடுவாசலை அடுத்த நல்லாண்டார் கொல்லை எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டது. கழிவுகள் கொட்டி வைத்திருந்த தொட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால் கிராமத்தினர் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். நல்லாண்டார் கொல்லையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, அப்பகுதி மக்களிடையேயும், ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகப் போராடும் மக்களிடையேயும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில், இன்று மாலைக்குள் எண்ணெய் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் மீண்டும் நடைபெறும் என மக்கள் அறிவித்துள்ளனர். நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்ட போது சிறைபிடிக்கப்பட்ட கறம்பக்குடி வட்டாட்சியரும், கோட்டாட்சியரும் கழிவுநீர் தொட்டியை மூடுவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். இந்த நிலையில், கழிவுநீர் தொட்டியை மட்டுமின்றி எண்ணெய் கிணற்றையே மூட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com