covai dmk ec meeting
covai dmk ec meetingPT Desk

செந்தில் பாலாஜி கைது: திமுக கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து கோவையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும், இதில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் மதசார்பற்ற கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் கோவையில் நடைபெற்ற திமுக செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை கண்டித்து, கோவை சிவானந்தா காலனி பகுதியில் வரும் 16ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 செந்தில் பாலாஜி கைது
செந்தில் பாலாஜி கைதுPT Desk

கோவை டாட்டாபாத் அருகே உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநகர மாவட்டச் செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுவில் 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த அவசர செயற்குழுவில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் வரும் 16 ஆம் தேதி மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என செயற்குழுவில் மாநகர மாவட்ட செயலாளர் கார்த்திக் அறிவித்துள்ளார். அந்த கண்டன பொதுக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிட கழகத் தலைவர் வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

dmk ec meeting
dmk ec meetingpt desk

50,000 பேர் வரை இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக மாநகர மாவட்டச் செயலாளர் கார்த்திக் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Attachment
PDF
All Party Leaders Arikkai - 14.6.2023
Preview

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com