#PTsurvey திமுக ஆட்சிக்கு மக்களின் மதிப்பெண்? டாப் 3 தலைவர்கள்? - கருத்துக்கணிப்பு முடிவு

#PTsurvey திமுக ஆட்சிக்கு மக்களின் மதிப்பெண்? டாப் 3 தலைவர்கள்? - கருத்துக்கணிப்பு முடிவு

#PTsurvey திமுக ஆட்சிக்கு மக்களின் மதிப்பெண்? டாப் 3 தலைவர்கள்? - கருத்துக்கணிப்பு முடிவு
Published on

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. ஓராண்டில் திமுக ஆட்சி குறித்த கருத்துக்கணிப்பை புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தியது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தலைமையின் செயல்பாடுகள் மற்றும் மக்களை கவர்ந்த திட்டங்கள் என்னென்ன? மக்களுடைய மதிப்பீடு என்னென்ன? என்பது குறித்த கேள்விகளும், எதிர்க்கட்சிகளுடைய செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன? எந்தெந்த தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருக்கிறது? இளைஞர்கள் மத்தியில் எந்தெந்த தலைவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் இந்த கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ளன.

மேலும் மக்கள் இந்த அரசுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர் என்பது குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. 20 பகுதிகளை 5 மண்டலங்களாக பிரித்து ஏப்ரல் 21 முதல் மே 15 வரை கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு 10-இல் எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு,

1-5 வரை மதிப்பெண் கொடுத்தோர் - 37.43%

6-10 வரை மதிப்பெண் கொடுத்தோர் - 59.03%

கூற இயலாது / தெரியாது என்றவர்கள் - 3.54%

தமிழ்நாட்டின் முதல் 3 தலைவர்களை வரிசைப்படுத்துக என்ற கேள்விக்கு பொதுமக்கள் கூறிய பதில்கள்...

முதலிடத்தில் இருப்பவர் யார் என்றதற்கு,

மு.க. ஸ்டாலின் - 49.10%

எடப்பாடி பழனிசாமி - 14.92%

சீமான் - 6.94%

அண்ணாமலை - 5.68%

ஓ.பன்னீர்செல்வம் - 4.34%

அன்புமணி ராமதாஸ் - 3.28% என்று கூறியுள்ளனர்.

இரண்டாம் இடத்தில் இருப்பவர் யார் என்ற கேள்விக்கு பொதுமக்களுடைய பதில்களின் வீதம் முறையே,

எடப்பாடி பழனிசாமி - 16.69%

சீமான் - 12.32%

மு.க ஸ்டாலின் - 10.62%

ஓ.பன்னீர்செல்வம் - 9.38%

திருமாவளவன் - 7.75%

விஜயகாந்த் - 5.56%

கமல்ஹாசன் - 4.40%

அண்ணாமலை - 3.83%

அன்புமணி ராமதாஸ் - 3.11% என்று பதிலளித்துள்ளனர்.

மூன்றாம் இடத்தில் இருப்பவர் யார் என்ற கேள்விக்கு பொதுமக்களுடைய பதில்களின் வீதம் முறையே,

சீமான் - 13.49%

ஓ.பன்னீர்செல்வம் - 8.02%

விஜயகாந்த் - 7.75%

மு.க. ஸ்டாலின் - 6.66%

எடப்பாடி பழனிசாமி - 6.43%

திருமாவளவன் - 5.06%

கமல்ஹாசன் - 3.89%

அன்புமணி ராமதாஸ் - 3.47%

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com