தலைவாசல்| ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக இருக்கும் வட்டாட்சியர்? நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம்!
தலைவாசல் அருகே கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறி வட்டாட்சியரை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்று வருகின்றனர்.
ஆக்கிரமிப்பிற்கு துணை போகும் வட்டாட்சியர்?
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான கிணறு மற்றும் கோவில் இடத்தை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் மனுஅளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மேலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக தலைவாசல் வட்டாட்சியர் பாலாஜி செயல்படுவதாக கூறியும் அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு நிலத்தை உடனடியாக மீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.