\
தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தைப்பூசத் திருவிழாவிற்கு இனி பொதுவிடுமுறை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on: 

ஜனவரி 28 ஆம் தேதி பொதுவிடுமுறை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் கடவுளான முருகனை கொண்டாடும் வகையில் வருடம் தோறும் ஜனவரி 28 ஆம் தேதி தைப்பூசத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தத்திருவிழாவானது இந்தியா மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், இந்தோனோசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில், இந்தத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்தனர். அதனடிப்படையில் ஜனவரி 28 ஆம் தேதியை பொதுவிடுமுறை நாளாக அறிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “ நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மக்கள் தொடர்ந்து என்னிடம் தைப்பூசத் திருவிழாவை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் ஜனவரி 28 ஆம் தேதியை பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கிறேன். இனி வரும் ஆண்டுகளிலும் ஜனவரி 28 ஆம் நாளானது, பொதுவிடுமுறை நாளாகும்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com