தமிழ்நாடு
எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளுக்கு பொதுவிடுமுறை
எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாளுக்கு பொதுவிடுமுறை
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஜனவரி 17-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிக்கையை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் வெளியிட்டுள்ளார். செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் பொது விடுமுறை விடப்படுவதாகவும், 17-ஆம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.