\
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
Published on

தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. 

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டியில் 5 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளைக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அத்துடன் பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறை இயக்குநர்கள் மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு கொண்டுவரப்பட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com