குழந்தையை பறிக்க முயன்ற மனநலமற்ற பெண் - மடக்கிப்பிடித்த மக்கள்

குழந்தையை பறிக்க முயன்ற மனநலமற்ற பெண் - மடக்கிப்பிடித்த மக்கள்

குழந்தையை பறிக்க முயன்ற மனநலமற்ற பெண் - மடக்கிப்பிடித்த மக்கள்
Published on

உசிலம்பட்டியில் தாயிடம் இருந்து குழந்தையை பறித்துச் செல்ல முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ப்ரியா என்பவர் தனது 2 வயது மகனை தோளில் சுமந்தபடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த பெண் ஒருவர்‌ குழந்தையை பறித்துச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது. அவரிடம் இருந்து தப்ப முயன்ற ப்ரியா சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார். 

இதனைக்கண்ட பொதுமக்கள் குழந்தையை பறித்துச் செல்ல முயன்ற பெண்ணை மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. உசிலம்பட்டியில் உணவு கேட்டு 3 பேரை மனநோயாளி ஒருவர் அண்மையில் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com