பிடிபட்ட சிறுத்தைpt web
தமிழ்நாடு
கோவை: சிறுத்தையை வலைவீசிப் பிடித்த பொதுமக்கள்
கோவை பூச்சியூர் அருகே சுற்றித்திரிந்த சிறுத்தையை அப்பகுதி மக்களே வலை வீசிப் பிடித்துள்ளனர்.
கோவை பூச்சியூர் அருகே சுற்றித்திரிந்த சிறுத்தையை அப்பகுதி மக்களே வலை வீசிப் பிடித்துள்ளனர்.
அண்மையில், 4 ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தை மீண்டும் அதே பகுதியில் நோட்டமிட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுத்தையின் கால்நடமாட்டத்தை வைத்து வனத்துறையினர் கூண்டுகளை அமைத்திருந்தனர்.
இந்நிலையில், சிறுத்தை மீண்டும் அதே பகுதியில் சுற்றித்திரிந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனாலும், பொதுமக்களே வலையை வீசி சிறுத்தையைப் பிடித்துள்ளனர்.. இதில் இருவருக்கு காயமேற்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வனத்துறையினர் வந்த பின் சிறுத்தையை கூண்டுக்குள் அடைத்தனர்.