chennaipt desk
தமிழ்நாடு
சரமாரியான கேள்விகளை எழுப்பிய மக்கள்: சமாளிக்க முடியாமல் கிளம்பிய எம்எல்ஏ
சென்னை வேளச்சேரியில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ. அசன் மௌலானாவிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் கனமழை பெய்து 4 நாட்களாகியும் வேளச்சேரி பகுதியில் வெள்ளம் முழுவதுமாக வடியவில்லை. இதனிடையே, மழை பாதிப்பு தொடர்பாக பேட்டியளித்த அந்த தொகுதியின் எம்.எல்.ஏ அசன் மௌலானா, மழை வெள்ளம் என்பது இயற்கை சீற்றம் என்றும் இதனை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார்.
MLApt desk
இந்நிலையில், வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள டான்சி நகர் பகுதியை பார்வையிட சென்ற எம்.எல்.ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மழை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை சமாளிக்க முடியாமல் அசன் மௌலானா அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.