தமிழ்நாடு
பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து மரணம்
பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து மரணம்
ஈரோட்டில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கமலா நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பாலிடெக்னிக் படித்து வந்தார். கொரோனா பொது முடக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருப்பதால் சிறுவன் வீட்டிலிருந்துள்ளார். இந்தக் காலத்தில் அந்தச் சிறுவன் தொடர்ந்து பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து அந்தச் சிறுவன் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.