`நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமற்றது போர்’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
இருக்கின்ற ஒரு பூமியில் நாடு என்ற ஒன்றே தேவையில்லாதது.
எல்லா உயிர்களும் வாழ வேண்டும்!
போர் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியம் தேவை. 1971 ல் அன்னையார் இந்திரா காந்தி நடத்திய பாகிஸ்தான் போர் தான் இன்று பங்காளதேஷ் என்ற நாட்டையே உருவாக்கியது
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மக்களின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும், இராணுவ வீரர்களின் தியாக வாழ்கையும் தவிர போர் முறை அல்ல..
போர் என்பது இயற்கைப் பேரிடர்களை விட ஆபத்தானது, இது மனித இனமே மனிதத்துவத்தை அழிக்கும் ஓர் பயங்கரமான சர்வாதிகாரப் போக்கு.
இது நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியவசியமற்ற ஒன்று...
நாட்டின் பாதுகாப்பிற்கு போர் அவசியமில்லை ஆனால் போர்படை அவசியம்
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அண்டை நாடு செயல்பட்டால் அங்கு போர் தேவைபடுகிறது .......ஆனால் இப்போது நாம் இருக்கின்ற காலகட்டத்தில் பேச்சுவாத்தை நடத்தி போர் ஏற்படுவதை தடுக்க வேண்டும் அதே சிறந்த ஆட்சியாளர்க்களுக்கு சிறப்பு .....இதில் பாதிக்கபடுவது பொதுமக்கள் ,இராணுவப் படை வீரர்கள், அவர்களின் குடும்பம், பொருளாதரம் ......இப்போது போர் தொடங்கிய நிலையில் உலக நாடுகள் தலையிட்டு ஒரு தீர்வு காண வேண்டும்