தமிழ்நாடு
''எம்ஜிஆருக்கு பிறகு ஸ்டாலின்'' - திமுகவினரையே அசரவைத்த பாஜக மாநில துணைத்தலைவர்! (வீடியோ)
''எம்ஜிஆருக்கு பிறகு ஸ்டாலின்'' - திமுகவினரையே அசரவைத்த பாஜக மாநில துணைத்தலைவர்! (வீடியோ)
ஜனநாய முறையில் முதல்வராக விரும்புவர் ஸ்டாலின் என பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக எம்எல்ஏ பெரியண்ணன்அரசு இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் எம்ஜிஆருக்கு அடுத்து தான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின் என தெரிவித்தார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்தும் தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் பேசிய அவர், ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். விரைவில் காலம் கனியும் என்றும், ஸ்டாலின் அரியணை ஏறுவார் என்றும் தெரிவித்தார்.