\
திமுகவில் இணைந்தார் பி.டி.அரசகுமார்!

திமுகவில் இணைந்தார் பி.டி.அரசகுமார்!

திமுகவில் இணைந்தார் பி.டி.அரசகுமார்!
Published on

பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருந்த அரசகுமார் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

புதுக்கோட்டையில் நடந்த திமுக நிர்வாகி திருமண விழாவில் பங்கேற்று பேசிய பி.டி.அரசகுமார், எம்.ஜி.ஆர்-க்கு பின்னர் தான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின் தான் என பேசியிருந்தார். அத்துடன் “காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும் தளபதி அரியணை ஏறுவார்” எனவும் கூறியிருந்தார். இது பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்திருந்த அரசக்குமார்,

“ஸ்டாலின் முதல்வர் ஆவார் என நான் பேசியது தொடர்பாக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில பொறுப்பு தலைவர் கேசவ விநாயகத்திடம் விளக்கம் அளித்துவிட்டேன்’’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று, அண்ணா அறிவாலயத்தில் மு.க .ஸ்டாலினை சந்தித்த அரசகுமார், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com