அரை நிர்வாணத்துடன் ஜன்னல்களை எட்டிப்பார்க்கும் நபர்: அச்சத்தில் மதுரை மக்கள்

அரை நிர்வாணத்துடன் ஜன்னல்களை எட்டிப்பார்க்கும் நபர்: அச்சத்தில் மதுரை மக்கள்

அரை நிர்வாணத்துடன் ஜன்னல்களை எட்டிப்பார்க்கும் நபர்: அச்சத்தில் மதுரை மக்கள்
Published on

மதுரையில் இரவுநேரங்களில் அரை நிர்வாணத்துடன் ஜன்னல்களை எட்டிப்பார்க்கும் நபரால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மதுரை நகரை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில், இரவுநேரங்களில் அரை நிர்வாணத்துடன் நடமாடும் மர்ம நபர் ஒருவர் ஜன்னல்களை எட்டிப்பார்த்து விட்டு தப்பியோடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் மதுரை வளர்நகர் விரிவாக்க பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில், இளம்வயதுடைய மர்ம நபர் ஒருவர் அரை நிர்வாணத்துடன் ஒவ்வொரு வீடாக நடந்து சென்று ஜன்னல்களை எட்டிபார்ப்பதோடு, வீட்டினுள் கொடிகளில் காயும் பெண்களின் ஆடைகள் மற்றும் சேலைகளை திருடிச்செல்வதும் பதிவாகியுள்ளது. புதூர் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com