\
மாணவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது: ஸ்டாலின்

மாணவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது: ஸ்டாலின்

மாணவர்களை கைது செய்வது கண்டனத்திற்குரியது: ஸ்டாலின்
Published on: 

உரிமைக்காக போராடும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து அவர்களை அச்சுறுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் கடந்த 8 நாட்களாக நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மாணவர்கள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போரட்டத்தை முடித்து வைத்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். உடலை வருத்தி போராட்டம் செய்வதை கைவிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்ற மாணவர்கள் பழச்சாறு அருந்தி தங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர். மு.க.ஸ்டாலினுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவும் மாணவர்களை சந்தித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com